ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.15.65 கோடி அபராதம் வசூல்…தமிழக காவல்துறை

தமிழகத்தை ஊரடங்கை மீறியதாக இதுநாள் வரையில், ரூ.15,65,25,485 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-27

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7,44,666 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,360 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,043 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 6,82,385 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 8644 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், ரூ.15,65,25,485 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *