ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட், ஜூன்-26

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அதான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிவேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.

மேலும் அந்த அந்த மாநில அரசுகள் கொரோனாவின் பாதிப்பை கருத்தில் கொண்டு தங்களது மாநிலங்களில் ஊரடங்கை நீட்டித்து கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கொரோானாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2.88 லட்சமாக உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,700 -ஆக உள்ளது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை அறிவித்திருந்தார். தற்போது மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *