தமிழகத்தை மிரட்டும் கொரோனா… ஒரே நாளில் மேலும் 3,645 பேருக்கு தொற்று..!

தமிழகத்தில் இன்று 2-வது நாளாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-26

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் 2 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில் நேற்று 3 ஆயிரத்தை தாண்டியது. இன்றும் 2-வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் இதுவரை 41,357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 957-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 1,956 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 49,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மதுரையில் இன்று ஒரேநாளில் மேலும் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1449ஆக அதிகரித்துள்ளது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 4,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 169 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,254 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று மட்டும் 33,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,42,649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 55.42% ஆக உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 46,046 ஆண்கள், 28,556 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *