இந்தியாவில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது
டெல்லி, ஜூன்-26

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 4,90,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 407 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15301 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.1 சதவீதமாக உள்ளது.
இதுவரை 2,85,637 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 13940 பேர் குணமடைந்திருக்கிறார்கள். குணமடையும் விகிதம் 58.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,89,463 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 147741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70977 பேருக்கும், டெல்லியில் 73780 பேருக்கும், குஜராத்தில் 29520 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.