தற்கொலை செய்து கொண்ட 16 வயது டிக்டாக் பிரபலம்!

டெல்லியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் ஸ்டாரான 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, ஜூன்-26

டெல்லியைச் சேர்ந்த ஷியா கக்கர் டிக்டாக்கில் பிரபலமானவர். டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில், புதன்கிழமை இரவு ஷாஹ்தாராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ப்ரீத்தி விஹாரில் வசித்து வந்தவர் ஷியா கக்கார்… 16 வயசு அழகு சிறுமி.. நல்ல திறமைசாலி.. நன்றாக டான்ஸ் ஆடுவார்.. டிக்டாக் வீடியோக்களில் ஷியா என்றால் அவ்வளவு ஃபேமஸ். விதவிதமாக நடித்து வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.. இவரது நடன அசைவுக்கும் நடிப்புக்கும் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.. இன்ஸ்டாகிராமில்‌ மட்டும்‌ 1 லட்சம்‌ பேர்‌ இவருக்கு ஃபாலோயர்ஸ் உள்ளனர்… அதேபோல டிக்டாக்கில்‌ 11 லட்சம்‌ ஃபாலோவர்ஸை வைத்துள்ளார். இது எல்லாவற்றிற்கும் காரணம், ஷியாவின் அழகும் திறமையும்தான். இந்நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்டார்..

தற்கொலைக்கு முன்பு சிரித்தபடியே ஒரு வீடியோவையும் இவர் வெளியிட்டுள்ளது மேலும் குழப்பத்தை தந்து வருகிறது. போலீசாரும் ஷிகாவின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பள்ளி ஆசிரியைகள், நண்பர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்..

இவரது மறைவுக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *