கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முகக்கவசம் தான் மருந்து.. பிரதமர் மோடி உரை..!!

கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வரை முகக்கவசமும், சமூக இடைவெளியுமே ஒரே மருந்து என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜூன்-26

உத்தர பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, காணொலி காட்சி மூலம் உத்தரபிரதேசத்தின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமவாசிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசத்தால் வாயை மூடுவது, மற்றும் மிகவும் முக்கியமானது ஆறு அடி தூரம் சமுக இடைவெளியை கடைபிடிப்பது என்று அவர் கூறினார். கொரோனாவால் பெரிய நெருக்கடியில் இருக்கும்போது, ​​உத்தரபிரதேசம் காட்டிய தைரியம், கொரோனாவை கையாண்ட விதம், நிலைமையைக் கையாண்ட விதம், வெற்றி பெற்ற விதம் பாராட்டத்தக்கது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நாம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசங்களை அணியவேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும், முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை தனது சால்வையின் மூலம் செய்து காட்டினார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் உத்தர பிரதேச அரசின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *