2,951 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

சென்னை, அக்டோபர்-09

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அரசு செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தொடர்ந்து உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வுகள் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு டெங்கு பாதிப்புகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் 2,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களைவிட இது மிகவும் குறைவு. கேரளாவில் டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் வட சென்னையில் அதிகமான டெங்கு பாதிப்பு உள்ளது. தருமபுரி, அம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சமயம் 10,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின்  பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *