பின்லாந்து பள்ளிகளில் செங்கோட்டையன் ஆய்வு

பின்லாந்து ஆகஸ்ட் 30 :

பின்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மழலையர் பள்ளி ஒன்றை பார்வையிட்டு அங்குள்ள கல்வி முறை பற்றி அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் 7 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் ஒரு கட்டமாக ஜோன்சு ஹெய்னாபுரோட்டில் உள்ள லிலுன்லாட்டி முன் தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார். அங்குள்ள கல்வி முறைகளை பற்றி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். 

மழலையர் பள்ளியில் கற்றுத்தரப்படும் கல்வி முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்கும் திறன் உள்ளிட்டவை குறித்து லிலுன்லாட்டி மழலையர் பள்ளி முதல்வரிடம் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டறிந்தார். பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர். முன்னதாக, இன்று காலையில் பின்லாந்து நாட்டின் வடக்கு கரிலியா மண்டலத்தின் மேயரான ரிஸ்ரோ பாவ் நேம்-ஐ மரியாதை நிமித்தமாக அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, கல்வி அதிகாரிகள், அறிஞர்களுடனும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *