பீகாரில் இடி-மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் இடி மின்னல், மழையால் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பாட்னா, ஜூன்-25

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இடி மின்னல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மட்டும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுக்கு 83 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *