ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா..பாஜக பிரமுகர் பரபரப்பு தகவல்

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது என பாஜக-வின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, ஜூன்-25

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப். மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கர்நாடக சிறைத்துறை “ஒரு கைதியின் விடுதலை என்பது பல்வேறு சட்ட விதிகளை வைத்துத்தான் கணக்கிட முடியும். சசிகலா போன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராத தொகையைச் செலுத்தியது உள்ளிட்டவற்றை வைத்து விடுதலை தேதி மாற்றி அமைக்கப்படும். இதன் காரணமாக இப்போதைய நேரத்தில் இந்த தகவலை நாங்கள் வெளியிட முடியாது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில், “சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடுத்தகட்ட தகவலுக்கு காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இவரது ட்வீட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆனால், தமிழக அரசியலில், அதிலும், குறிப்பாக அதிமுகவில் அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *