ஆகஸ்ட் 12-ந்தேதி வரை ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து..!

நாடு முழுவதும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லி, ஜூன்-25

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை ரெயில்வே வாரியம் திரும்ப வழங்கியது.
மத்திய அரசு ஐந்து முறை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இந்த ஐந்து முறையும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதி அளித்தது. இதனால் கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஊரடங்கு வருகிற ஜூன் 30-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதுவரை வழக்கமான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் மெயில், எக்ஸ்பிரஸ், பேசஞ்சர், புறநகர் ரெயில்கள் என அனைத்தும் ஆகஸ்ட் 12-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள் சேவை ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 12 வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துக்கு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கோவிட் 19 பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வரும் 12.08.2020 புதன்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்களை ரத்து செய்து முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *