தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரேநாளில் 3509 பேர் பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக கொரோனா தொற்று 3 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 2,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, ஜூன்-25

தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இன்று முதன்முறையாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 39,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2.236 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 911-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 1,834 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 88 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 9,60,674 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.70% ஆக உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32,543 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 3,509 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 43,835 ஆண்கள், 27,122 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *