இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 13,012 பேர் குணமடைந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் குணமடைவோர் சதவிகிதம் 57.43%-ஆக உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜூன்-25

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,894 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது.

மேலும் இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 73, 792 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 70,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,365 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 41,437 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *