நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை..!

நெல்லையின் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, ஜூன்-25

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, எந்த விளம்பரமும், ஆடம்பரமும் இல்லாமல், இயங்கி வரும், புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருட்டுக்கடையின் உரிமையாளர்களான ஹரிசிங் மற்றும் அவரது மருமகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் வசித்து வந்த பகுதியில், சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *