நாங்குனேரியில் ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

நாங்குனேரி.அக்.9

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளர்.

நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது நாங்குனேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதிக்குட்பட்ட நொச்சிகுளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சுய உதவிக்குழு உள்ளது. ஆனால் மானியக் கடன் வழங்குவதில்லை. விவசாயம், பெண்கள் மேம்பாடு குறித்து மாநில அரசு கவலைப்படாமல் உள்ளதாக கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *