மதுரை மக்களுக்கும் 1000 ரூபாய்.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி அரிசி அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை, ஜூன்-24

கொரோனா வைரஸ் தொற்கு காரணமாக சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். முழு பொதுமுடக்கத்தால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேசன் அரசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், பதிவு செய்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என்றார். அதன்படி ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் வெளி மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப்பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *