மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்குவங்கத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்குவங்கத்தில் ரயில் சேவை மற்றும் மெட்ரோ சேவைக்கு தடை வருகின்ற 31ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஜூன்-24

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களும் விரைவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *