தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2,865 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 2,865 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,424 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, ஜூன்-24

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 67,468 அகரித்துள்ளது.

 • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 37,763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2.424 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 866-ஆக உயர்ந்துள்ளது.
 • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,654 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 88 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 • தமிழகத்தில் இதுவரை 9,76,431 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
 • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.70% ஆக உள்ளது.
 • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32,709 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 2865 பேருக்கு தொற்று உறுதியானது.
 • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 41,678 ஆண்கள், 25,770 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *