இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலியான 2வது எம்.எல்.ஏ…!

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனஷ் கோஷ் கொரோனாவால் உயிரிழந்தார்.

கொல்கத்தா, ஜூன்-24

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷூக்கு, கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உறுதிப்பட்டது. தமோனஷ் கோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமோனஷ் கோஷ் மறைவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா இரங்கல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 3 முறை ஃபால்டா தொகுதி எம்எல்ஏவாகவும், கட்சி பொருளாளராகவும் இருந்த தாமோனாஷ் கோஷ், இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்களுக்காகவும், கட்சிக்காவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சமூக பணி மூலம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். தாமோனாஷ் நிரப்ப முடியாத ஒர் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜார்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மம்தா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொது வாழ்க்கையில் இருந்த தாமோனாஷ் கோஷ் மரணமடைந்துள்ளார். ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் திமுகவின் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸூடன் போராடி சென்னையில் உயிரிழந்தார். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இரண்டாவதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனஷ் கோஷ் உயிரிழந்தது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *