கொரோனா எதிரொலி..நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்-பிரம்மோற்சவ திருவிழா ரத்து

நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் இந்த வருடம் நடைபெற இருந்த ஆனி பிரம்மோற்சவ திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, ஜூன்-24

திருநெல்வேலி மாநகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். அவ்வகையில் இந்த வருடம் ஆனி பிரம்மோற்சவ விழா நாளை (ஜூன் 25) தொடங்கி அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடித்து வருவதால் இந்த வருடம் ஆனி பிரம்மோற்சவ திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் காரணமாகவும், கோவில் அர்ச்சகர்கள் அளித்துள்ள கருத்துருவின் படியும் நடப்பாண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, பொதுமக்கள், நன்கொடையாளர்கள், சிவனடியார்கள், பக்தர்கள், உபயதாரர்கள் மற்றும் நகரவாசிகள் கோவில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *