காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; சிஆா்பிஎஃப் வீரா் வீர மரணம்..!

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஒரு துணை ராணுவப்படை வீரர் வீர மரணம் அடைந்தார். சிஆர்பிஎஃப் ஜவான் கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர், ஜூன்-24

ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி), இராணுவத்தின் 55 ராஷ்ட்ரியா ரைஃபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுப் குழு புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு முற்றுகையிட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இலக்கு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, ​​அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் படை வீரரக்ளும் பதிலடி கொடுத்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார். காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரரை மருத்துவமனைக்கு கொன்று சென்றனனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து இரண்டு ஏ.கே. தாக்குதல் ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா தெரிவித்தார். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிரவாதிகள் குறித்து தேடுதல் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *