பிரான்சில் ரபேல் விமானத்தை பெற்றார் ராஜ்நாத் சிங்

பாரிஸ் அக்டோபர் 8;

பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பெற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, பிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெற்றது. வெலிஸி – வில்லாகூப்லே  விமானப் படைத்தளத்திற்குச் சென்ற இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அந்நாட்டு விமானப் படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.  இதையடுத்து அந்நாட்டு ராணுவ விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தபடி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் முதல் ரபேல் விமானத்தை ராஜ்நாத்சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *