தமிழகத்தில் புதிதாக 2,710 பேருக்கு தொற்று.. பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 2710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, ஜூன்-22

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று இதுவரை இல்லாத அளவில் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 34,112 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 55% ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,652 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 58.

இன்றைக்கு மட்டும் 26,592 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 9,19,204 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 27,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *