பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி, ஜூன்-22

ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஜெகநாதர் ஆலயம். இங்கு பாலபத்ரா மற்றும் அவரது சகோதரர், சகோதரிகளான ஜெகநாதர், தேவி சுப்ரா ஆகியோர் மூலவர்களாக உள்ளனர். ஆண்டுதோறும், இந்த 3 மூலவர்களுக்கு பிரமாண்ட தேர் செய்து, ஊர்வலம் நடத்தி மாபெரும் விழா நடத்து வழக்கம்.

ஜெகநாதர் ஆலயத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மவுசிமா கோவிலுக்கு ஊர்வலமாக மூலவர்கள் எடுத்துச் செல்வர். பின்னர், 9 நாட்களுக்கு பிறகு மூலவர்கள் மீண்டும் பூர்வீக இடத்திற்கு திரும்புவார்கள். 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், இசைக்கருவிகள் மற்றும் மேளதாளங்களை இசைத்தும் பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 23-ம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பாரம்பரிய நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கூடாது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பூரியில் ஜெகநாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழிகாட்டு நெறிமுறைகளுடன் பூரி ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரை நடத்தலாம் என கூறியுள்ளனர்.

அதேவேளையில் சுகாதார பிரச்சினையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் சில நிபந்தனைகளும் விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *