அடுத்த முதல்வர் ரஜினி தான்: ராதாரவி கணிப்பு

சென்னை, அக்டோபர்-08

தமிழகத்தில் அடுத்த தேர்தலில் ரஜினி ஆட்சியை பிடிப்பார் என அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவில் தொடர்ந்து இருந்து வந்த நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.

இந்நிலையில் சென்னையில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பிறந்த தினவிழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. ரஜினி சூழ்நிலைகளை ஆராய்ந்து பொறுமையாக முடிவு எடுக்கக்கூடியவர். ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும்.

ரஜினி அதிமுக, பாஜக கூட்டணியுடன் இணைந்து கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார். ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் பின்னால் நான் நிற்பேன் இவ்வாறு ராதாரவி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *