வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிமீட்டர்கள்.. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களின் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட உள்ளது.

டெல்லி, ஜூன்-22

டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 59746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தினமும் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது தினமும் 18000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படும். நோயாளிகள் நலமான பின்னர், அதை அரசாங்கத்திற்கு திருப்பித் தரவேண்டும். சுமார் 12000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *