இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 55.49% ஆக அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 55.49% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜூன்-21

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் நாள்தோறும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,90,730 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.
இதுவரை மொத்தமாக 68,07,226 பேருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, 2,27,755 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 13,925 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் தற்போது 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *