தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,532 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-21

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிக அளவாக 1,493 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 32,754 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1438 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 757-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1493 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 41,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 86 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 8,92,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.16% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,963 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 2532 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 36,598 ஆண்கள், 22,759 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *