நயன்தாராவுக்கு கொரோனாவா? – விக்னேஷ் சிவன் மறுப்பு..!

நயன்தாராவுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன்-21

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்குக் கொரோனா தொற்று என்று செய்திகள் பரவின. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தகவல்களுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து விக்னேஷ் சிவன் கூறி இருப்பதாவது: நாங்கள் நலமாக இருக்கிறோம். நான் என் படத்துக்கான கதை விவாதத்திலும், நயன்தாரா உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். எங்களுக்கு கொரோனா என்பதில் உண்மை இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *