அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை.. சுகாதாரத்துறை விளக்கம்..!

தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-21

தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தமிழக அரசு அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை முடிவை வெளியிட்டுள்ளது.

அதில், அவருக்கு கடந்த 18 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து 19 ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்ததாகவும் அதில் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *