திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா..!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோவை, ஜூன்-21

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவரது மனைவி மற்றும் மகள் உள்பட குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *