கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; மாத்திரை விலை ரூ.103!!

கொரோனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் என்ற மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை, ஜூன்-20

மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனத்தின் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. FabiFlu என்ற பெயர் கொண்ட மருந்தை கொரோனா பாதித்து லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விலை ஒரு மாத்திரை ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருந்துச் சந்தையில், இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக ரூ.3,500க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில், ஃபேபிஃப்ளூ (FabiFlu) மருந்துதான், முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முதல் மருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து என்ற நிலையில் உள்ளது. அதன்படி, கொரோனா பாதித்த ஒருவருக்கு முதல் நாளில் 1,800 மில்லி கிராம் மருந்தை ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கும், தொடர்ந்து அடுத்த நாள் முதல் 14 நாள்களுக்கு தினமும் இரண்டு வேளை என்ற வகையில் 800 மில்லி கிராம் மருந்தையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

இந்த மருந்து தற்போது மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனையகங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்த, மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை தான் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *