புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.50,000 கோடி மதிப்பில் வேலை வாய்ப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார், பிரதமர் மோடி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

டெல்லி, ஜூன்-20

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில் இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் இத்திட்டப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், துறை சார்ந்த மந்திரிகள் பங்கேற்றனர்.

6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 125 நாட்கள் இப்பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *