இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியது..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஜூன்-20

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா தொற்று 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 395048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 14516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 375 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12948 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 213831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 9120 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 168269 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124,331 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5893 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 62,773 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 54,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 666 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30,271 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 53,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2035 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 23,569 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *