பள்ளி மற்றும் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

அக்டோபர்-08

விஜயதசமியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு கோயில்களில் திருஏடு ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை நெல்மணியில் ‘அ’ எழுத்து எழுத வைத்து, கல்வி கற்க தொடக்கி வைத்தனர்.

விஜயதசமி நாளில் கல்வி கற்க தொடங்கினால், குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது ஐதீகம். அந்தவகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருஏடு ஆரம்பம் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருஏடு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலை முதலே கோயில்களில் திரண்டனர். திருஏடு தொடக்கத்தின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு முன்பு தாம்பூலத்தில் நெல்மணி, பச்சரிசி வைக்கப்பட்டது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு, நெல்மணியில் தமிழ்மொழியின் முதல் எழுத்தான. ‘அ’ எழுத வைத்து கல்வி கற்க தொடக்கி வைத்தனர். தொடர்ந்து, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் பெயர்கள் அனைத்தையும் குழந்தைகளை எழுத வைத்தனர். மேலும், பல அரசு தொடக்கப்பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் விஜயதசமியை முன்னிட்டு கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக அழைத்து வந்து நெல்மணிகளில் “அ” கரம் எழுத கற்றுக்கொடுக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *