கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூன்-19

சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகமான நிலையில், நிமோனியா பாதிக்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ராஜீவகாந்தி மருத்துவமனையில் கொரோனா பாதித்த சத்யேந்தர் ஜெயினின் நுரையீரலில் தொற்று அதிகரித்துள்ளதால், செயற்கை சுவாச உதவியுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின், இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த திங்கட்கிழமை அன்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துக் கொண்டார். இதனையடுத்து அந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற அன்று இரவே இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது கொரோனா தொற்றாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
முதலில் இவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை என சோதனை முடிவுகள் வந்த நிலையில் பின்னர் 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பல்வகை மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடைய சுகாதாரத்துறை பொறுப்புகள் தற்போது துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே த்யேந்திர ஜெயினின் உடல்நிலை பாதிப்பு தீவிரமானதை தொடர்ந்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான மேக்ஸில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார்.

அவருக்கு அதிகமாக மூச்சு திணறல் ஏற்படுவதால் செயற்கை சுவாச உதவியுடன் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவரது நுரையீரல் பகுதியில் கொரோனா தொற்று அதிகமான பரவி உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அவரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *