வேலூர் மாவட்டத்தில் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூர், ஜூன்-19

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு கடை உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் காய்கறி கடைகள், மாளிகைக் கடைகள் என அனைத்துக் கடைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

  • வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும்.
  • காய்கறி, மளிகைக்கடைகள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும்.
  • இறைச்சிக்கடைகள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்.
  • மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, அரிசி கடை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இரவு 10 முதல் காலை 6 வரை இயங்கும்.
  • ஓட்டல், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
  • மருந்துக்கடைகள், பெட்ரோல், பங்க்குகள், உழவர் சந்தை ஆகியவை தினசரி இயங்கும்.
  • மேலும் வேலூரில் உள்ள அழகு நிலையம், முடிதிருத்தும் நிலையம், ஸ்பா ஆகியவற்றை ஜூன் 30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *