தப்பி ஓடிய கொரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஜூன்-19

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் ஒருவர் திடீரென மாயமானார். ஆஸ்பத்திரியில் இருந்து அவர் தப்பி ஓடி இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசாரும் சுகாதாரத்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தப்பியோடிய கொரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் மீட்கப்பட்ட உடல் தப்பி ஓடிய கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது. தப்பி ஓடியவரை போலீசார் தேடிவந்த நிலையில், அவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *