தேசத்துரோகி பட்டமா?? ஏற்கமுடியாது…பா.ஜ.க.வை எதிர்த்த பிரபல இயக்குநர்…

அக்டோபர்-08

மணிரத்னம் உள்ளிட்ட 49 திரை கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருப்பது வருத்தமளிப்பதாக பிரபல இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ‘பசு வதை தடுப்பு’ என்னும் போர்வையில் அப்பாவி இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான மணிரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா திரையுலகினர் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும், தேசத்துரோகி, நகர்ப்புற நக்சல் என மக்கள் மீது முத்திரை குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *