முழு ஊரடங்கால் உஷாரான குடிமகன்கள்.. ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!!

சென்னை அருகில் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரு நாள் மட்டும் 33 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

சென்னை, ஜூன்-19

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக நாளொன்றுக்கு 6 கோடிக்கு மது விற்பனையாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மேற்கு பகுதியில் 12 கோடி ரூபாய், காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 5 கோடி ரூபாய், தெற்கு பகுதியில் 16 கோடி என மது விற்பனையாகியுள்ளது. ஊரடங்கில் மது கடைகள் மூடப்பட்டதால், உஷரானா மதுபிரியர்கள், ஒரே நாளில் மது வகைகளை வாங்கி குவித்துள்ளனர். அடுத்த 12 நாட்களுக்கு மதுபானங்கள் வாங்க முடியாது என்பதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள குடிமகன்கள் மொத்தமாக மதுபாட்டிகல்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *