கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் SP வேலுமணி.. நெட்டிசன்கள் வரவேற்பு..!!

சென்னை, ஜூன்-19

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதே நேரத்தில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. முகக்கவசம் அணிவது, கை, கால்களை சுத்தப்படுத்துவது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை திறம்பட செய்து வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
மக்களுக்கு இந்த பேரிடரில் செய்ய வேண்டிய உதவிகளை ஒருபக்கம் செய்துகொண்டே, இன்னொரு பக்கம் இந்த பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் மக்களை அறிவு ரீதியாக அவர் தயார் செய்து வருகிறார். சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை கொரோனா வைரஸ் கிருமி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறம்படச் செய்து வருகிறார்.

வேலுமணியின் விழிப்புணர்வுப் பணியால் பள்ளிக் குழந்தைகள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான சுகாதார உணர்வை பெற்று வருகின்றனர்.

அதற்கு உதாரணம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ட்விட்டர் பக்கம் முழுவதும் காணப்படும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகளும், வீடியோக்களுமே சாட்சி.

கொரோனாவிற்கு உலக அளவில் தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம், சமூக விலகல், நவீன/பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், கைகளை கழுவுதல் ஆகியவை மட்டுமே தற்போதைய தடுப்பு மருந்து. எதற்காகவும் #சமரசம்வேண்டாம்! #DontCompromise என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பேரிடர் காலத்தில் உதவும் தன்னார்வலர்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது இந்தப்பணிக்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *