இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,80,532 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.80 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்னர்.

டெல்லி, ஜூன்-19

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 380532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 336 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12573 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 204711 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 163248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 120504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 52334 பேருக்கும், டெல்லியில் 49979 பேருக்கும், குஜராத்தில் 25601 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *