பெட்ரோல்-டீசல் விலை 13-வது நாளாக இன்றும் உயர்வு..!

பெட்ரோல் டீசல் விலை 13வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 82 காசுகளாக உள்ளது.

சென்னை, ஜூன்-19

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. இந்நிலையில், 13வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 காசுகள் உயர்ந்து ரூ.78.37 ஆகவும், டீசல் விலை 63 காசுகள் உயர்ந்து ரூ.77.06 ஆகவும் விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *