கொரோனாவை தடுக்க 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்.. கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ் நியமனம்..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ஜூன்-18

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-

அரியலூர் – சரவணவேல் ராஜ்

பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்

கோவை- ஹர்மந்தர் சிங்

நீலகிரி- சுப்ரியா சாஹூ

கடலூர் – ககன்தீப் சிங் பேடி

தர்மபுரி- சந்தோஷ் பாபு

திண்டுக்கல்- மன்கத் ராம் சர்மா

ஈரோடு- காகர்லா உஷா

கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி

கரூர்- விஜயராஜ் குமார்

திருச்சி- ரீட்டா ஹரிஷ்

கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்

மதுரை- தர்மேந்திர பிரதாப் யாதவ்

புதுக்கோட்டை – ஷம்பு கல்லோலிகர்

தஞ்சாவூர்- பிரதீப் யாதவ்

நாமக்கல்- தயானந்த் கட்டாரியா

சேலம்- நசிமுதீன்

விருதுநகர் – மதுமதி

தூத்துக்குடி- குமார் ஜெயந்த்

நாகை- முனியநாதன்

ராமநாதபுரம்- சந்திர மோகன்

சிவகங்கை- மகேஷன் காசிராஜன்

திருவாரூர்- மணிவாசன்

தேனி- கார்த்திக்

திருவண்ணாமலை- தீராஜ் குமார்.

திருநெல்வேலி- செல்வி அபூர்வா

திருப்பூர்- கோபால்

வேலூர்- ராஜேஷ் லக்கானி

விழுப்புரம்- முருகானந்தம்

கள்ளக்குறிச்சி- நாகராஜன்

தென்காசி- அனு ஜார்ஜ்

திருப்பத்தூர்- ஜவஹர்

ராணிப்பேட்டை- லட்சுமி பிரியா

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்:-

செங்கல்பட்டு- உதயசந்திரன்

திருவள்ளூர்- பாஸ்கரன்

காஞ்சிபுரம்- சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *