தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது..வானிலை மையம் அலர்ட்..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-18

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமாக கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி – குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *