கடவுளே மன்னிக்க மாட்டார்..! பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

புவனேஸ்வரம், ஜூன்-18

ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை புகழ்பெற்றது. இந்த ஆண்டின் ரத யாத்திரை வருகிற 23-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவை கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தர யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாட்டே தலைமையிலான அமர்வு, அதிகளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது அனுமதி கொடுத்தால் ஜெகநாதரே மன்னிக்கமாட்டார் எனக்கூறி பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *