டிடிவி தினகரன் சாக்கடைக்கு சமமானவர்-புகழேந்தி கடும் தாக்கு

கோவை, அக்டோபர்-08

கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள வர்ஷா திருமண மண்டபத்தில் அ.ம.மு.க. முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.

டிடிவி தினகரனை தலைவனாக ஏற்றதற்கு உங்கள் முன்னிலையில் மன்னிப்பு கோருவதாக கூறினார். டிடிவி ஒரு சாக்கடைக்கு சமமானவர் என்றும், பசுந்தோல் போத்திய ஒரு நரி டிடிவி என்றும் கடுமையாக விமர்சித்தார். வேலு நாச்சியருக்கு சமமான சசிகலாவின் பணத்தை எப்படியெல்லாம் டிடிவி விரையம் செய்தார் என்று தமக்கு தெரியும் என்றும், டிடிவியின் குடுமி தற்போது தன்னுடைய கையில் இருப்பதாகவும் கூறினார். விரைவில் டிடிவி குறித்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் புகழேந்தி உறுதியளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, டிடிவியால் பதவி இழந்தவர்கள் த்ற்போது தவித்து வருகிறார்கள், பதவியை இழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டிடிவி நன்றி கடன்பட்டவராக இருந்தால் அவருடைய எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக அரசை தான் ஆதரிப்பார் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *