ஆர்.எஸ்.எஸ்.விழாவில் HCL அதிபர் ஷிவ்நாடார்

நாசிக் அக்டோபர் 8 :

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய விழாவில் எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பேரணியை அவர் பார்வையிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி மற்றும் தசரா விழாவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு விஜயதசமி விழா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தஎச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இதற்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *