‘இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது’ – பிரதமர் மோடி எச்சரிக்கை..!

இந்தியா எந்த நாட்டின் மீதும் வன்முறையில் ஈடுபடுவது கிடையாது, அதே நேரத்தில் யாரேனும் இந்தியா மீது அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டால் இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது. பதிலடி கொடுக்கக்கூடிய சக்தி இந்தியாவிடம் இருக்கிறது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி, ஜூன்-17

இந்திய பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும் லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது. வீரமும் தீரமும் இந்தியர்களின் பண்பு. இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியா அமைதியையே விரும்புகிறது; தேவைப்பட்டால் பதிலடி கொடுக்கவும் தயங்காது. தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். இந்தியாவின் உரிமையில் ஒருபோதும் சமரசம் கிடையாது.

எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் வீண்போகாது. எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *