எனக்கு கொரோனா இல்லை..! திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜன் விளக்கம்..!

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வி.பி.கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என விளக்கமளித்துள்ளார்.

சென்னை, ஜூன்-17

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருமான விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டன.

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என வி.பி.கலைராஜன் விளக்கமளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது. எந்தவித கொரோனா தொற்றும் ஏற்படவில்லை.நான் எனது இல்லத்தில் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *